114 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 1 |
கடலுக்குள் வலைவீசும் மக்கள் கூட்டம் கரையோரம் வாழ்கின்றார்; காற்ற டித்தால் தடதடவென் றோடிவிடும் அவர்கள் வீடு; தவறாமல் தெருத்தோறும் கோவி லுண்டு; மடமையொடு சாதிபல உண்டு; பிச்சை வாழ்வினரும் மிகவுண்டு; கண்டி வற்றைத் திடமிக்க என்னுள்ளம் நொந்து சிற்றூர் திரும்பிவந்தேன்; சிறுமைஎலாம் அழிவ தென்றோ? 4 (முதன் முதலாகச் சென்னைப் பட்டினத்தைக் கண்டு பாடிய பாடல்.) |