பட்டிக்காட்டான் நிலைமண்டில ஆசிரியப்பா உழைப்பே என்னுயிர், களைப்பே யின்றி உழுவேன், நடுவேன், உறுகளை எடுப்பேன், கண்ணெனக் காத்துக் கதிர்முற் றியபின் அறுப்பேன், சுமப்பேன்; ஆண்டை வீட்டில் நிறைப்பேன், மகிழ்வேன், நிலத்தவர் மகிழ்வார்; இல்லம் செல்வேன் என்மனை யாட்டி எலும்புடன் தோலென இருக்கும் பிள்ளையை அடித்திடல் கண்டதும் அடித்ததேன்? என்பேன்; `சோறு சோறெனச் சொல்லி அழுதால் சோற்றுக் கெங்கே போவது? சொல்வீர்’ என்பாள்; வல்லிடி இதயம் பாயும்; களஞ்சியம் நிறைத்தோம் கஞ்சி இல்லை! காலம் வருமெனக் கலங்கி இருந்தேன்; இவ்வகை வாழ்நாள் இயங்க, ஓர்நாள் நோயுற் றுடலம் நொந்தேன்; பின்னர்த் தொடர்ந்தது நோய்தான் தொல்லைகள் உற்றேன்; உள்ளூர் மருத்துவர் உரைத்த மருந்துகள் உண்டேன் பயனிலை; ஒருவர் வந்தார் `நகரம் சென்றால் நன்மை பெறலாம்’ என்றனர் என்பால் இருப்பே இல்லை உழன்றேன் உழன்றேன் உற்றார் ஒருவர் பார்க்க வந்தார் “பகவான் காப்பார் திருப்பதி சென்று தீர்த்தம் ஆடி முடிஎடுப் பேனென முடிவுசெய் தால்நோய் விலகும்” என்று விளம்பினர்; கையில் இல்லை யாயினும் என்னுயிர் வேட்கையால் |