பக்கம் எண் :

118கவியரசர் முடியரசன் படைப்புகள் - 1

மொழிவாழவும் இனம்வாழவும்
    முயல்வாய்தமிழ் மகனே
முரணாதொரு முகமாயெழு
    முடியாததும் உளதோ?
இழிவாகிய நிலைஓடிட
    எடுவாள்பகை மலையோ?
எழுவாய்தலை நிமிர்வாய்உனை
    எதிர்வாரினி இலையே. 1

5. தமிழ் உலகம்