14 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 1 |
இரட்டுற மொழிதல் என்னும் சிலேடை நயத்தில் இக்கவிஞர் மிகவும் வல்லவர். இவர், கவிதைகளில் பெரும்பாலனவற்றில் உட்பொருள் வைத்தே பாடியுள்ளார். உண்மையிலே `உய்த்துணரும் வகையிலே படைப்பதுதான்’ கவிதையின் நீடித்த வாழ்வுக்கு உதவும். மட்டுமென்ன. மனித சமுதாய வளர்ச்சிக்கே இத்தோல்வி துணை நிற்குமாகையால், ஆயிரம் முறை தோற்பதற்கு நாமும்தான் ஆயத்தமாக இருக்கிறோம். பிள்ளை பெறாதவனையும் தந்தை யாக்கும் இப்பாமலர்கள். “கவிஞன் நமக்குத் தெரிந்ததைத் தானே சொல்லுகிறான். நாம் அன்றாடம் கண்டு, நுகரும் பல நிகழ்ச்சிகளைத் தானே குறிப்பிடு கிறான். இதிலே தனிச் சிறப்பு என்ன இருக்கிறது?” “நிறைய இருக்கிறது” - நாம் கண்டவற்றிலே தான், இதுவரை நாம் காணாத உண்மை ஒன்றும் இருப்பதை எடுத்துச் சொல்லுகிறான். நாம் அனுபவிக்கும் அதே நிகழ்ச்சியிலேதான், நாம் இதுவரை உணராத புதுமை ஒன்றும் இருப்பதைக் குறிப்பிடுகிறான். “உரைநடை எனக்கு, நான் முன்னறியாத ஒன்றைச் சொல்லுகிறது. கவிதையோ நான் முன்னறிந்திருந்த ஒன்றையே சொல்லுகிறது” என்று சர் வால்டர் ராலே என்ற அறிஞர் கூறினாராம்.* கோழி எவ்வளவு கருத்தோடு தன் குஞ்சுகளைப் பாதுகாக் கிறது. பருந்தையும் எதிர்த்து, பார்ப்புகளைச் சிறகால் அணைத்துப் பாதுகாக்கிறது அல்லவா? அதே கோழி, தன் குஞ்சுகளாக முன்பு விளங்கியன என்பதையும் மறந்து, தன் இரையை அவை கவர்ந்து விடுமோ என்று அஞ்சி, மூக்கினால் கொத்தியும் சிறகால் அடித்தும் விரட்டக் காண்கிறோம் அல்லவா? இதிலே புதைந்து கிடக்கும் ஒரு புதுமையான கருத்தைக் கவிஞர் தருகிறார். தன் மகனை மிக அன்புடன் பேணும் ஒரு தாய். மருமகள் வந்தவுடனே, அவள் மீது கொள்ளும் வெறுப்புணர்ச்சியால் பெற்ற மகனையும் புறக்கணிக் கின்றாள் அல்லவா? அதற்கு இதை ஒப்பிடுகிறார் ஆசிரியர். `வளரக் கெடும்’ என்ற தலைப்பமைந்த இப் பாடல் புதுமை மிக்க, ஒப்பற்ற கற்பனையாகும்.
*Sri Walter Releigh once said that he looked to prose to tell him something he did not know before, to poetry to tell him something he knew already. -P.H.B. Lyon |