140 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 1 |
மணிவிழா வாழ்த்து எண்சீர் விருத்தம் தமிழுருவே! தமிழ்காக்கும் போர்க்க ளத்தே தலை நிமிர்ந்து முன்னிற்கும் இளைஞ ரேறே! தமருடனே மலர்முகத்துத் தமக்கை சேர்த்துப் பொதுப்பணியே தம்பணிஎன் றாற்றும் செம்மால்! இமையளவும் ஓய்வின்றி உடல்பே ணாமல் இரவுபகல் உழைக்கின்ற தாத்தா! இந்நாள் உமையணுகும் நலமிக்க அறுபான் ஆண்டு நிறைவினைக்கண் டுளம்நிறைய உவப்புக் கொண்டேன் போர்வாளும் விடுதலையும் விகடன் கல்கி பொதிந்துள்ள பையொன்று கையில் உண்டு சேர்வாரும் சேராரும் வேறு கொள்கை செல்வாரும் நும்சொல்லில் அடங்கி நின்று நேர்வருவார் எனுமுண்மை காட்டும் அப்பை; நெடுஞ்சூழ்ச்சி நம்மொழிமேல் போர்தொ டுத்தால் நேர்நிற்க உரமுண்டென் றெடுத்துக் காட்ட நிலத்தூன்றாத் தடியுண்டு மற்றோர் கையில் இந்நாட்டுத் தமிழ்ப்புலவர் உரிமை யின்றி இழிநிலையில் உள்ளநிலை கண்டு வெம்பி என்னாட்டுத் தமிழ்ப்புலவர் ஒன்று சேர ஏற்றமுற உரிமைபெறக் கழகம் கண்டீர்! |