பக்கம் எண் :

முடியரசன் கவிதைகள்147

நேரிசை வெண்பா

ஆண்டறுப தானாலும்
    அன்றேபோல் இன்றளவும்
காண்டகுநல் தோற்றத்தன்
    காசினியில் - மீண்டும்பல்
ஆண்டாண்டு வாழ்ந்திடுக
    அன்பன் முருகப்பன்
    ஈண்டும் புகழோ
டிருந்து.

கம்பன் புகன்றதெனக்
    கட்டுரைத்த பாக்கடலுள்
நம்பிக் குளித்து
    நலங்கண்டான் - அம்புவிக்கு
முத்தெடுத்துக் கோத்து
    முழுநூலில் தந்திட்டான்
நத்துதமிழ்ப் பாவை
    நயந்து.

முத்தெடுக்க மூழ்கி
    முருகப்பா பட்டதுயர்
தித்திக்கும் செந்தமிழே
    நேர்ந்துணரும் - வைத்திருந்த
தஞ்சைமன்னன் ஏடுரைக்கும்
    தக்கபுல வோர்குழுவின்
நெஞ்சுரைக்கும் இவ்வுலகில்
    நின்று. 6

(அமராவதி புதூர் மகளிர் இல்லங்கண்ட திரு. சொ. முருகப்பனார் மணி விழாவுக்காகப் பாடப்பெற்ற பாடல்.)