ஒருவர்பிழை பொறுத்திடுதல் இருவர் நட்பாம்; உயர்நூல்கள் பயின்றாலும் வாழ்க்கை ஏட்டில் ஒருவருளம் பிறர்பயில வேண்டும்; வேண்டின் உண்மைநிலை இன்பநிலை காணல் வாய்க்கும்; பெருகிடுநல் வாழ்வுக்கு மனைவி மக்கள் பேரணியாம் மங்கலமாம் என்பர் ஆன்றோர்; அருகிருந்து திறந்துள்ளம் அளவ ளாவும் அன்புளத்தன் உயிர்நண்பன் ஒளிவி ளக்காம் உளமொத்த இரட்டையராய் உடன்பி றப்பாய் உணர்வொன்றாய்ப் பழகிவரும் நண்பன் தன்னை உளமொத்த துணையாகக் கொள்க என்றே உன்கையில் அடைக்கலமாத் தந்தேன்; எங்கள் உளமொத்த வாழ்வேபோல் வாழ்க அன்பை உயிரென்று போற்றிடுக; இன்பம் பொங்க வளமிக்க தமிழ்பாடும் என்றன் நாவால் வாழ்த்துகிறேன் வாழ்த்துகிறேன் வாழ்த்துகின்றேன். 5 (கெழுதகை நண்பர் திரு. தமிழண்ணலுக்கும் அடைக்கம்மை என்ற சிந்தாமணிக்கும் நடைபெற்ற திருமணத்தில் பாடப் பெற்ற பாடல்.) |