பக்கம் எண் :

முடியரசன் கவிதைகள்153

அன்றுமுதல் இன்றுவரை கொள்கைப் பற்றில்
    அணுவளவும் பிறழாது நிலைத்து நிற்போய்!
என்றுமுள தென்றமிழ்க்குத் தொண்டு செய்ய
    இடுக்கணுனைத் தொடர்ந்துறினும் கலங்கா நெஞ்சாற்
குன்றனையாய்! பொதுவாழ்வுக் குறிக்கோள் கொண்டாய்!
    கூர்த்துணர்ந்து முன்னேற்றக் கருத்துங் கொண்டாய்!
இன்றுனைநான் வாழ்த்துவதாற் பெருமை கொண்டேன்
    என்மனமும் நின்மனமும் ஒன்றாக் கண்டேன். 12

(பன்மொழிப் புலவர் திரு. கா. அப்பாத்துரையார் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பெற்றமைக்காகத் திருச்சிராப்பள்ளியில் நடந்த பாராட்டுக் கூட்டத்தில் பாடிய பாடல்.)