பக்கம் எண் :

158கவியரசர் முடியரசன் படைப்புகள் - 1

மாதவி

நிலைமண்டில ஆசிரியப்பா

ஆரிய மாக்கள் அவர்நிலம் விட்டுச்
சீரிய உயர்தனிச் செம்மொழி வழங்கும்
தமிழகம் புகுந்து தறுகண் அருள்நிறை
தமிழர்க் கெல்லாம் தகுநிறை கற்பினைச்
சொற்றனர் எனச்சில கற்றோர் செப்பினர்;
நற்றகு மரபினர் கற்பறி யாரோ?
நன்றோ இதுவென நானயர்ந் திருந்தேன்;
துன்றிய அரசினைத் துறந்திடு தூயோன்
இளங்கோ என்முன் தோன்றி “மனத்தைத்
துளங்க விட்டாய் துயருனக் கேனோ?”
என்றனர்; என்துயர் இதுவெனச் சொன்னேன்;
“மதியிலி கேட்பாய்! மாதவி வாழ்வு
புதுவ தன்றே புகல்வதை யறியாய்!
ஆட்டம் பயின்றாள், அரசனும் விரும்பும்
கோட்டமில் குணத்தாள், கோவலன் றன்மேல்
நாட்டங் கொண்டாள், நல்லற மென்னும்
இல்லறம் பூண்டாள்; எழில்மணி மேகலைப்
பேறும் பெற்றாள்இப் பெரிய வாழ்வு
மாறுமோர் நாளென மனத்திலும் நினையாள்
ஆயினும் அந்தோ அரசன் பிழையால்
ஆயினன் பிணமென அறைந்தனர் அறிந்தோர்;
தீதிலாக் கோவலன் தீர்ந்தனன் என்ற
தீமொழிக் கேட்டுத் திகைத்தனள், பதைத்தனள்;