போம்வழி யாதெனப் புலம்பினள், அன்புடைக் கொழுநன் மாண்டான் குவலய வாழ்வு தழுவுதல் வேண்டாள், தன்பொருள் யாவும் அறத்திற் காக்கி அறவணர்ச் சார்ந்து புறச்செல வொழிந்து புகுந்தனள் பள்ளி, இன்பந் துறந்தாள், இசைநடந் துறந்தாள், என்பும் அன்பால் இளகிடப் பெற்றாள், அதனுடன் அமையா தருள்மணி மேகலை பித்துல கறுத்துப் பெருநிலை பெறவே துறவு பூணத் தூய்மை யாக்கினள், மறமனத் தாயின் மாற்றம் வெறுத்தாள் இனையள் அன்னை என்னுயிர் மாதவி அனையள் பிறந்த அருமை நாட்டில் மானமே மதிக்கும் மாந்தர் வாழ்ந்தனர் இங்கோ வந்தவர் இசைத்தனர் கற்பை? ஆரிய இலக்கியம் அரிவையர் பண்பைச் சீரிய முறையில் செப்பிய துண்டோ? இழிவாம் இழிவாம்” என்றவர் மறைந்தார் நன்றவர் மொழியே வாழிய கற்பே. 42 |