பக்கம் எண் :

முடியரசன் கவிதைகள்161

வீட்டுரிமை சொத்துரிமை பிரிக்கும் போழ்து
    வியனாக ஒன்றிருந்தால் பொறுத்தி ருக்க
மாட்டார்கள் உடன்பிறப்பென் றெண்ணார் ஓடி
    வழக்குரைக்கும் அறமன்றம் ஏறி அங்குக்
காட்டிடுவர் தம்திறமை, எஞ்சி யுள்ள
    கைப்பொருளை மன்றாடி காலில் வைத்துப்
போட்டழுவர் பயனொன்றும் காணு கில்லார்
    பொறாமையுளம் இவருள்ளம் பொக்கை யுள்ளம் 4