பக்கம் எண் :

162கவியரசர் முடியரசன் படைப்புகள் - 1

வளரக் கெடும்!

நிலைமண்டில ஆசிரியப்பா

குறுநடை நடந்து கூடி ஒன்றாய்க்
கோழியின் குஞ்சுகள் குலவி யிருந்தன;
எச்சில் இலைகள் இன்னும் பற்பல
மிச்சில் எல்லாம் மிதந்து கிடக்கும்
குப்பைக் கோட்டில் கூர்உகிர் விரலால்
கிளறிக் கிளறிக் கிடைத்ததைக் கோழி
குஞ்சிகட் களிக்கக் கொக்கரித் ததுவே;
பறந்து வந்தன பச்சிளங் குஞ்சுகள்,
மொய்த்திடும் அவற்றுள் முந்தித் திறக்கும்
மென்சிறு வாயுள் வன்பெரு மூக்கால்
கொஞ்சிக் கொஞ்சிக் கொடுத்தது கண்டேன்;
அடடா அடடா! அன்னையின் அன்புக்
கேதடா உலகில் ஈடும் எடுப்பும்?
அஃறிணைப் பிறப்பும் அன்னையின் அன்பால்
பின்னிக் கிடக்கும் பெரு நிலை உணர்ந்தேன்;
அவைகள் யாவும் அஞ்சிட ஓர்குரல்
வானிற் கேட்டது; வட்ட மிட்ட
பருந்து வந்து பாய்ந்தது; கோழி
தன்முழு வலியால் தாக்கி விரட்டும்
தகவு கண்டு தாய்மைப் பண்பை
மேலும் வியந்தேன் சின்னாள் சென்றன
குஞ்சுகள் பெரிய கோழிகள் ஆயின;
குப்பையை அன்னைக் கோழி கிளற
இரைபெறும் நோக்கால் இளைய கோழிகள்