166 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 1 |
உள்ளம் மிகவிரும்பி ஒவ்வோர் இடங்களிலே வள்ளல் சடையப்பன் வளர்பெயரைப் பொறித்திருந்தேன் பொறித்திருந்த காவியத்தைப் பூவுலகோர் ஏற்பதற்கு நெறித்துறையில் அலைமோதும் நீளரங்கத் தலத்துறையும் முக்கோட்டு நாமத்தார் முன்வைத்தேன் அரங்கேற்றும் சொற்கேட்டு மதவெறியால் சூழ்ச்சிபல செய்தார்கள் இன்றென்றார் நாளை என்றார் இடுப்பொடிய வைத்தார்கள் என்றென்றும் அவரிழைத்த இடுக்கண் மறப்பதில்லை அவ்வளவில் விட்டாரா? ஆய்ந்துரைத்த என்கவியைச் செவ்விய நன்முறையில் சேர்ந்துபலர் கற்றார்கள் நன்மைக்கோ தீமைக்கோ நம்பும் படியாகப் புன்மைக் கவிபலவும் புகுத்திவிட்டார் பெருத்துவிட்டேன் அழுக்காறு கொண்டனரோ ஆசைமிகக் கொண்டனரோ? இழுக்கான பலபாடல் இடைச்செருகி விட்டார்கள் ஏடெழுதும் தேட்டாளர் எழுத்தாணி தவறியதால் பாடங்கள் மிகப்பலவாய்ப் பல்கினவே படிப்பவர்கள் உறும்பாடு கணக்கில்லை உரைஎழுதும் பேரறிஞர் கரும்பான தமிழ்விடுத்துக் கற்றவித்தை காட்டிவிட்டார் என்பேரால் திருநாளென் றேறியவர் மேடைமிசை என்பேரை ஒதுக்கிவன வான்மீகி ஏற்றத்தை விளம்பினார் அவன்பேரை விளம்பரங்கள் செய்தார்கள் களம்புகுதற் கென்பேரைக் காட்டுகிறார் அவ்வளவே நயவஞ்சர் சூழ்நிலையில் நான்வளர வழியில்லை பயனொன்றும் காணாமல் பதைபதைத்து நானிருந்தேன் இந்நிலையில் என்நண்பர் எழுந்தார் உலகிற்கு நன்னிலையில் என்கவியை நயமாக எடுத்துரைத்தார் புயல்வண்ணத் தழகனையே புகழ்உயிராக் கொண்டுநின்ற தயரதன்போல் என்கவியே தம்முயிராக் கொண்டிருந்தார் நாடெல்லாம் என்பேரே நவின்றுவந்தார் அதன்பிறகே கேடின்றி நான்வளர்ந்தேன் கே’ளென்ற தவ்வுருவம் |