பக்கம் எண் :

முடியரசன் கவிதைகள்167

உன்புகழைப் பரப்பியஅவ் வுத்தமர்தாம் யாரென்றேன்
தென்பொதியக் குற்றால டி.கே. சி நீயறிவாய்

இன்னுமோர் இளைஞருளார் எனைவளர்க்கும் கடம் பூண்டார்
பண்ணும் புகழ்காரைப் பதியுடையார் மதியுடையார்

சொல்லேந்திச் சீதையுடன் சுரம்சென்ற முன்னவனை
வில்லேந்தி நின்று விழித்திமையாக் காத்துபோல்

விழிப்போடு காத்து வளர்க்கின்ற வீரரவர்
பழிப்பில்லாத் தொண்டுசெயும் பண்பார் கணேசன்எனும்

நண்பவரவர்; அங்கேயே நாடறிந்த மற்றொருவர்
நண்பருண்டு சுமந்திரன்போல் நல்லமைச்சர் எனை வளர்க்கும்

கருத்துடையார்நான் சொன்னகவியுணர்வார் என்னுளத்தின்
கருத்தறிவார் உரைஎழுதிக் காக்கின்றார் அன்னவர்தாம்

முருகப்பர் அருகிருப்பர் முத்தமிழின் சுவைசொல்லி
உருகவைப்பர் இத்தகைய உத்தமரால் வளர்கின்றேன்

இன்னுமோர் உயிர்நண்பர் இங்குண்டு யாரென்று
சொன்னவுடன் திகைக்காதே உண்மையினைச் சொல்கின்றேன்

கண்முடி வழக்கத்தைக் கடும்புயலே போலெதிர்த்து
மண்மூடச் செய்ய மனங்கொண்டார் திடங்கொண்டார்

கற்றறிந்த சொல்வல்லார் காஞ்சி புரத்துறைவார்
கற்செயல்கள் பலசெய்வார் நாடறியும் அவர்என்றன்

உயிர்த்தோழர் என்றந்தஉருவம் புகன்றதும்நான்
அயிர்த்தேன்பின் அண்ணாதுரையா எனக்கேட்டேன்;

ஆமாம் அவரேதான்; அவர்வளர்த்த கதைசொல்வேன்;
ராமா எனச்சொல்வர் ராமன்பேர் தானறிவர்

காவிய நலனறியார் கவிதையின் சுவையறியார்
மேவிய கதையைஎங்கும் மேலாகப் பேசிடுவர்

கதைகாலட் சேபம்என்று காணும் இடமெல்லாம்
கதைகதைப்பர் பக்திஎன்பர் கம்பன்யார் எனஅறியார்