பக்கம் எண் :

170கவியரசர் முடியரசன் படைப்புகள் - 1

கண்ணீர்

எண்சீர் விருத்தம்

காதல் உலகில்

கவலற்க தைத்திங்கள் வருவேன் என்று
    காதலிபால் இனிதுரைத்துத் தேற்றிச் சென்றான்
அவளதற்கு மனமொப்பி ஆற்றி நின்றாள்;
    அறுவடைகள் புரிந்துவளம் பொங்கும் தையை
உவகைத்தேன் பெருக்கெடுக்கத் தையல் கண்டாள்;
    உளங்கவர்ந்து பிரிந்தவன்றன் வரவு நோக்கிக்
குவளைக்கண், நனிசிவந்து துயிலும் இன்றிக்
    குளமாயிற் றவன்வாரா திருந்த தாலே

இடியிடித்து மின்வெட்டிக் குளிர்ந டுக்க
    இருகையால் உடல்பொத்தி ஒடுங்கும் வண்ணம்
கொடிபிடித்து மழைபெய்யப் பிரிந்த காதற்
    கொழுநன்இனும் வந்திலனே என்று சோர்ந்து
துடிபிடித்த இடையுடையாள் துவளும் போது
    துணைவனங்குத் தோன்றியதும் புதையல் கண்ட
மிடிபிடித்தோன் உள்ளம்போல் துள்ளித் தாவும்
    மிளிர்விழியில் மெருகிட்டுத் ததும்பும் கண்ணீர்

குழந்தை உலகில்

அன்னையிடம் தின்பண்டம் கேட்டுப் பிள்ளை
    அடுத்தடுத்து நச்சரிக்க, அச்சம் காட்டி
உன்னையிதோ கட்டுகிறேன் என்று கையை
    ஓங்கிஒரு கயிறெடுக்க மிகச்சி வந்து