174 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 1 |
உழைப்பின் உருவம், உள்ளம் விரிகடல், களைப்பும் சலிப்பும் காணாச் செம்மல் நடுநிலை பிறழா நல்லவர், நாட்டில் கெடுநிலை காணிற் கிளர்ந்தெழு வீரர், மனிதருள் முத்து, மயிலை முத்து எனும்பெயர்க் *கிழவர், எமக்கும் கிழவர், நிறுவிய மன்றம் நெடுநாள் வாழிய! பெறுமுயர் தாயெனப் பேணுக இதனை! தொடர்புறும் மாணவர் தூயவ ராகி அடலே றென்ன ஆண்மைமீக் கூர்ந்து மொழியும் நாடும் முந்துறக் கண்டு வாழ்க வாழ்கென வாழ்த்துதும் யாமே. 36 (சென்னை மாணவர் மன்றத்தை வாழ்த்திப் பாடியது)
*கிழவர் - முதியவர், உரியவர் |