பக்கம் எண் :

முடியரசன் கவிதைகள்175

வேண்டுவன

எண்சீர் விருத்தம்

குணத்தாலும் உடலாலும்
    அழகு மிக்க
குமரிஎனை மணந்தின்பம்
    கொடுக்க வேண்டும்;

கணக்கோடு மகப்பேறு
    நிகழ வேண்டும்;
கள்ளமிலா நண்பருடன்
    தொடர்பு வேண்டும்;

மணத்தோடு தென்றல்வந்
    துலவு கின்ற
மாடியுள்ள வீடொன்று
    வேண்டும்; வாழ்வு

பணத்தாலே இடரின்றி
    நடத்தல் வேண்டும்;
பகையில்லா அருளுள்ளம்
    இருத்தல் வேண்டும். 1

(பாடிய பாடல்கள் பல, ஆயினும் ஒன்றுதான் கிடைத்தது.)