பக்கம் எண் :

176கவியரசர் முடியரசன் படைப்புகள் - 1

மணமகனுக்கு

நிலைமண்டில ஆசிரியப்பா

மணமகள் நயந்திட மற்றுளோர் மகிழ்ந்திடப்
புதுமணக் கோலம் பூண்டிடும் நினக்குப்
புகல்வதொன் றுளது புந்தியிற் கொள்க!
தேன்மலர் இதழில் தென்றல் வருடத்
தோன்றுமோர் நறுமணம்; துளிர்அரும் பாயினும்
அழிவுறு மலரே ஆயினும் அவற்றுள்
நறுமணம் தோன்றாது நாடுநன் குணரும்;
மக்கள் மணமும் அத்தகு சிறப்பே,
மணம்பெறு பருவம் வந்துள பெண்பால்
பூவின் தன்மை பொலிவதால் அவளைப்
பூப்படைந் தனளெனப் புகன்றிடும் உலகம்;
மலரும் தென்றலும் மணந்திடத் தரகர்
எவரும் இல்லை; இதுவே தமிழர்
மணமுறை யாகும்; மற்றைய எல்லாம்
தமிழ்மணம் அல்ல வந்தவர் தந்தன;
இதனை உணர்ந்துநீ இனிய தமிழால்
மணம்பெறும் அன்ப! வாழ்க! வாழ்க!
பெண்மைக் குயர்வு பேணுக! உடல்நலம்
காத்துக் குழந்தைகள் கணக்கொடு பெறுக!
இன்பங் காணுக! துன்பம் நேரின்
துணிவுடன் அதனைத் துணையுடன் எதிர்க்க!
அன்பைப் பாய்ச்சி இன்முகங் காட்டி
வாழ்முறை தெரிந்து வாழ்க! ஒருவர்