பக்கம் எண் :

முடியரசன் கவிதைகள்177

குற்றம் புரியின் மற்றவர் பொறுக்க!
இதுவே வாழ்க்கை இதுவே மணமாம்
உலகில் ஒருவர் மற்றவர்க் குறுதுணை
ஆமெனும் உண்மை அறியச் செய்வது
திருமண மேயிதைத் தெரிந்து வாழ்க!
சமத்துவம் நும்பால் தழைத்திடச் செய்தே
எடுத்துக் காட்டென இலங்குக இனிதே! 30