பக்கம் எண் :

முடியரசன் கவிதைகள்183

தண்முகிலே நீபொழிந்தாற் சோறே யில்லை
    தயைசெய்வாய் என்றுழைப்பால் உண்போன் சொல்வான்;
கண்மறையப் போர்வைக்குள் சுகமே காண்போன்
    கனித்திருப்பான்; இரப்பாளன் வசவு சொல்வான்;
விண்மழைக்கு வரவுரைத்து மயில்கள் ஆடும்;
    வேறொருபாற் குயில்வருந்தி வாய டங்கும்;
பண்ணிசைக்கும் கவிஞனுடன் காள மேகம்
    பாரிலெவர் உரைகேட்டு நடத்தல் ஆகும்? 4

(பலரும் வந்து, `அதைப்பாடு, இதைப்பாடு’ என்று தொல்லை தந்த போது பாடிய பாடல்.)