184 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 1 |
மன்னர் ஆட்சி எண்சீர் விருத்தம் மன்னாட்சி என்னுஞ்சொற் கேட்டாற் போதும் மனங்குழம்பி வாய்பிதற்றி வெறுத்துச் சொல்வோர் என்னாட்டில் இருக்கின்றார் அவர்க்குச் சொல்வேன்; எங்கெங்கோ கொடுங்கோலர் ஆட்சி செய்தார் அந்நாட்டார் வெறுத்துரைத்தல் இயல்பே யாகும்; ஆருயிராச் செங்கோன்மை புரிந்து வந்த இந்நாட்டில் தமிழகத்தில் மன்னர் ஆட்சி இகழ்ந்துரைப்போர்க் கெஞ்சுவது பழியே யாகும் குடிபுரக்கும் படியிருக்கும் மன்னர் ஆட்சி கொடுங்கோன்மை கண்டறியா நிலையி ருக்கும்; மடிசுரக்கும் ஆவினைப்போல் மக்கள் வாழ்வில் வளஞ்சுரக்க அருள்சுரக்கும் அவர்தம் நெஞ்சம்; முடியிருக்கும் வாளிருக்கும் வெற்றி கூறும் முரசிருக்கும்; குடியாட்சிப் பண்பே அங்குக் குடியிருக்கும்; இவ்வுண்மை அறிய கில்லார் குறைகூறின் அவர்மதியில் பழுதி ருக்கும் மொழிவளர்த்தார் கலைவளர்த்தார் அறம்வ ளர்த்தார் முறைபிறழும் நிலைவருமேல் அறிஞர் நல்ல மொழியுரைக்கச் செவிகொடுத்தார்; கற்பின் செல்வி மூண்டெழுந்த சீற்றத்தால் கடிந்து ரைத்துப் பழியுரைத்தாள் உயிர்கொடுத்தான் பாண்டி மன்னன்; பார்த்ததுண்டோ குடியரசில் இதுபோல் மேன்மை? இழிவுரைக்க முயலாதீர்! உயர்ந்த தென்றே இயம்பிடுக சங்கத்து மன்னர் ஆட்சி 3 |