188 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 1 |
பொன்மொழி புகுதா வன்செவி மாக்கள் அன்பை மறந்தனர் அறிவை இகழ்ந்தனர் வன்பே புரிந்து வாழ்தல் விழைந்தனர் புறத்துறுப் பெல்லாம் போற்றி வளர்த்தனர் அகத்துறுப் பொன்றே அகற்றினர் அந்தோ! புறத்தில் தூய்மை சிறப்புடன் ஏற்றினர் அகத்தில் அழுக்கும் அவ்வணம் ஏற்றினர் ஆகுல நீரன ஆற்றினர் சாற்றினர் ஆகும் நெறியதும் ஆகா நெறியதும் காணும் அறிவினைக் காணார் நின்னைப் பேணும் முறையிற் பிழைபா டுற்றனர் என்னே இவர்தம் இயல்பே! இனியும் கொன்னே புரிவினை கொள்ளா ராகி நீநயந் துரைத்த நெறியினிற் செல்க! நாநயங் கூறி நல்லன நினைந்து மாநிலம் அன்பால் மலர்க! போரின் தீங்கெலாம் நீங்கித் தெளிகநல் லமைதி! யாங்கணும் தொண்டுளம் ஓங்குக பெரிதே! 41 |