பக்கம் எண் :

190கவியரசர் முடியரசன் படைப்புகள் - 1

எங்கே சென்றீரோ?

பஃறொடை வெண்பா

அஞ்சுகிலா நெஞ்சாய்! அறிவாய்ந்து கூர்காட்டும்
செஞ்சொல்லாய்! சீர்திருத்தத் தென்னாட்டு மோகன்ராய்!

எங்கள் முருகப்ப! எம்போல்வார்க் கோர்துணையே!
இங்கிருந்து சென்னைநகர் ஏகியநீ மீளவில்லை

என்னுஞ்சொல் அம்பாய் எமதுளத்துத் தைத்ததுவோ
என்னஇனிச் செய்வோம் இரங்கலன்றி அந்தோநின்

தோழர் திரு.வி.க. தூய கவிமணியார்
வீழ நமக்கினிமேல் வேலைஎன்ன என்றுணர்ந்தோ?

கம்பனிடம் சென்று கருத்தறிய வேண்டுமென்றோ?
வெம்பும் அழுக்காற்று வீணுலகம் ஈதென்றோ?

நீயெம்மை நீத்தனையே! நிற்கின்றோம் இவ்வுலகில்
தாயில்லாச் சேய்போல் தவித்து 12