பக்கம் எண் :

192கவியரசர் முடியரசன் படைப்புகள் - 1

கிந்தனெனும் புதுமைதரும் கதையைப் பாடக்
    கேட்பதினி எந்நாளோ? பொங்கல் நாளில்
எந்தவிதம் வானொலிதான் அவன்க ருத்துக்
    கோவைகளை எடுத்தியம்பும்? நடிகர் யார்க்கும்
பந்தமுடன் அறிவுறுத்தி வழியும் காட்டிப்
    பாங்குறுத்தத் தலைவரினி யாரே உள்ளார்?
சிந்தைஎலாம் தேள்கொட்டிக் கிடந்து வாடும்
    குடும்பமதைச் செயற்படுத்த வல்லார் யாரே?

நின்வாழ்வின் மதுரந்தான் பிரிவை அந்தோ
    நினைந்தாற்ற வல்லாரோ? கொடுமை வந்து
பொன்வாழ்விற் புகுந்ததுவே! நினக்க மைந்த
    புதுநடையைக் கனிமொழியைப் பெருஞ்சி ரிப்பைத்
தம்வாழ்வில் எவ்வண்ணம் மறந்தி ருப்பார்?
    தவிக்கின்ற பல்குடும்பம் யாது செய்யும்?
மின்வாழ்வாய் அமைந்ததுவே நின்றன் வாழ்வு!
    மேலவனே! பிரிந்தாலும் நிறைந்தாய் நெஞ்சில் 5

(வகுப்பறையில் இருக்கும் பொழுதும் கலைவாணர் மறைவுச் செய்தி கேட்டுப் பாடிய பாடல்.)