பக்கம் எண் :

நெஞ்சிற் பூத்தவை203

4. என்னுயிர்க் காதலி

மதுமலர்க் குழலி! மயங்கினேன் நின்பால்
எதுகை மோனை எளிதில் வருமேல்
அதனைத் தொடுவேன் அணியென இடுவேன்;
திருந்திய அணிகளை வருந்திப் பெற்றுப்
பொருந்தப் பூட்டிப் புகழ்ந்தது மில்லை;
பூத்துக் குலுங்குமுன் புதுமுகங் காணக்
காலமும் பொழுதுங் கருதிக் கருதிக்
காத்துக் கிடந்து காலங் கழியேன்;
கள்ளைப் பருகிக் களிமயக் குற்றென்
உள்ளிற் பொங்கும் உணர்ச்சிப் பெருக்கால்
அள்ளி யள்ளிப் பருகும் அவாவுடன்
நின்னைத் தொடர்ந்தேன் என்னை மறந்தேன்;
உணர்வுடன் கலந்து புணர்குவை யாயின்
தணலும் எனக்குத் தண்புனல் ஆகும்,
உலகம் ஒருபொருட் டில்லை; உண்மை;
விலகிட நினைவையேல் விடுவேன் உயிரை;
கட்டிய மனையாள் கலங்குவள் என்றோ
எட்டி நின்றனை? இல்லை யில்லை
அட்டி யில்லை அவளும் இசைந்தனள்;
கவிதை மணிப்பெயர்க் காதலி! என்னைத்
தவித்திட விடுதல் தகுமோ இனியும்?
இரவில் நிலவில் இனியநல் லுறவுடன்
உரியாள் என்பால் உசாவும் பொழுதும்
கண்முன் நின்று களிநடம் புரிகுவை;
கண்ணயர் பொழுதுங் கனவிடை வந்து