210 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 1 |
9. சின்னந் தவிர்ந்தேன் நீறினை அணிந்து பார்த்தேன்; நெற்றியில் திருமண் ணிட்டோர் வேறெனப் பகைத்து நின்றேன்; விடுத்தபின் திருமண் வைத்தேன். நீறணிந் தோரை யெல்லாம் நெடும்பகை யாகக் கொண்டேன்; *மாறிடும் இவற்றை இந்து மதமென ஏற்றுக் கொண்டேன். சிலுவையைத் தோளில் இட்டோர் சீறிடும் பகைவ ரானார்; குலவிய குல்லா வைத்தோர் கொடும்பகை யாகப் போனார்; நிலவிய நீறும் மண்ணும் நெற்றியில் அணிதல் விட்டேன் உலகினில் நல்ல சின்னம் ஒன்றைநான் தேடி நின்றேன். சிலுவையைச் சுமந்து பார்த்தேன்; சின்னம்வே றணிந்தோ ரெல்லாம் உலகில்அஞ் ஞானி என்றே உளத்தினிற் கருதிக் கொண்டேன்! தலைதனிற் குல்லா வைத்தேன் மற்றது தரியா ரெல்லாம் நிலவிய சைத்தான் என்றே நெஞ்சினிற் பகைத்து நின்றேன்.
*மாறிடும் - மாறுபாடுடைய |