பக்கம் எண் :

நெஞ்சிற் பூத்தவை211

இனியநன் மக்கட் பண்பை
    இளகிய அன்பை நீக்கி
மனிதரைப் பகைக்கச் செய்யும்
    மதம்படு சின்னம் விட்டேன்;
கனிவுறும் அன்பும் பண்பும்
    கசடறு நெஞ்சம் வாய்க்கும்
தனியொரு வழியைக் கண்டு
    தளர்விலா தொழுகு கின்றேன்.

(வேறு)

மனத்தினுள் மாசுற மறைபல ஓதி
    கணத்தினில் ஆத்திகன் ஆவதை விடுத்து
நல்லவ னாகி நாத்திகன் என்றொரு
    சொல்லினைப் பெற யான் குளுரைத் துளனே!

01.06.1981