212 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 1 |
10. நாத்திகனா? ஆத்திகனா? அன்பும் தூயநற் பண்பும் நிறைந்து மன்பதை ஓம்பும் மாபெரும் நோன்பினைப் பற்றிய நெஞ்சிற் பழுது படாவணம் முற்றிய உறுதியில் நிற்றலை விழைவேன்; வஞ்சகம் பொறாமை நெஞ்சறி பொய்ம்மை நஞ்சென வெறுத்து நடக்கும் இயல்பினேன்; மற்றவர்க் குறுகண் மனத்திலும் நினையேன்; செற்றமுங் கலாமும் செய்திட விழையேன்; பகுத்துணர் அறிவிற் பற்றுதல் உடையேன்; நகத்தகும் மடமைகள் செகுத்திடும் படையேன்; மதம்எது வாகினும் மனத்தினிற் கொள்ளேன்; அதனதன் சின்னமும் அணிதலும் செய்யேன்; கோவிலுங் குளமுங் குறுகுதல் செய்யேன்; மேவிய பூசனை யாவையும் வேண்டேன்; ஆதலின் நாத்திகன் என்றெனை அனைவரும் ஓதுதல் கேட்டேன்; உளத்தினில் நகைத்தேன்; அன்பையும் பண்பையும் அறவே மறந்தும் மன்பதை கெடுத்தும் தன்னலம் மிகுத்தும் பழுதுகள் மனத்திற் படர விடுத்தும் தொழுதுபின் சென்று துதிபல பாடி வஞ்சக நெஞ்சினில் வாய்மை துறந்தும் அஞ்சுத லின்றி அரும்பழி இழைத்தும் செற்றமுங் கலாமுஞ் செய்தலே தொழிலாய் மற்றவர் பொருளை மறைவினிற் கவர்ந்தும் பகுத்தறி வின்றிப் பாழ்படும் பழைமையுள் |