பக்கம் எண் :

நெஞ்சிற் பூத்தவை213

நகத்தகும் மடமையுள் நாடொறும் மூழ்கி
மதமுங் கடவுளும் வாயாற் கூறி
அதனடை யாளச் சின்னம் அணிந்தும்
எண்ணிய படியெலாம் இறைவன் பெயர்சொலிப்
புண்ணியத் தலங்கள் பூசனை தீர்த்தம்
என்றெலாம் கதைத்தும் எத்தித் திரியின்
நன்றென் மக்கள் நயப்புடன் போற்றி
ஆத்திகன் என்றே அழைத்திடல் கேட்டேன்;
கூத்திது கண்டு குலுங்கச் சிரித்தேன்;

21-12-1978