பக்கம் எண் :

நெஞ்சிற் பூத்தவை217

13. தலை நண்பன்

நிலைபெறும் நட்புடன் நிற்பைநீ எனவே
தலையில் வைத்துனைத் தாங்கினேன் நண்பா!
இலைநீ என்பால் இன்றெனைப் பிரிந்தனை
நிலையில் இழிந்தாய் நினையா போற்றினேன்?
மருத்துவர் தம்பால் மாதம் ஒருமுறை
திருத்தி நின்னுடல் செழிப்புற வளர்த்தேன்;
*ஆடிமுன் நின்றுனை அழகுறச் செய்திட
நாடிய என்கை நலிந்து சோர்வுறத்
தடவித் தடவித் தந்தநல் ஒப்பனை
**மடவை நீயோ மறந்தனை பிரிந்தனை;
ஒப்பனை செய்தபின் உன்றன் அழகை
எப்படி எப்படி இருவிழி யாலும்
பார்த்துப் பார்த்துக் களித்தேன்! அன்றைய
நேர்த்திஎன் நெஞ்சில் நிலைத்து நின்றதே!
குலையா தொழுங்குடன் கூடித் திகழ்ந்திடப்
பலநாள் முயன்றேன் இலையே நன்றி!
பணிந்தும் வளைந்தும் பழகினை அன்று
***தணந்தாய் இன்று தளர்ந்ததென் மனனே;
பகுத்தறி வில்லாய் படியா திருந்தனை
வகுப்பில் வைத்துனை வளர்த்தனை மறந்தாய்!
கருகரு வெனநீ கண்கவர் வனப்பொடு
வளர்ந்து திகழ்ந்திட வாஞ்சையால் உன்னை
நறுநெய் யூட்டி நாளும் வளர்த்தேன்;


*ஆடி - கண்ணாடி **மடவை - அறிவிலி ***தணர்ந்தாய் - பிரிந்தாய்