பக்கம் எண் :

218கவியரசர் முடியரசன் படைப்புகள் - 1

அன்றுநான் தெம்பும் ஆற்றலும் உடைமையால்
ஒன்றிய அன்புடன் ஒட்டி நின்றனை;
இன்றுநான் தளர்ந்தேன் இயல்புநீ மாறினை!
வாழ்விலும் தாழ்விலும் மாறாக் குணத்தொடு
சூழ்வதே நட்பெனச் சொற்றனர் முன்னோர்;
வறுமையில் என்னுடன் வளர்ந்தனை இன்றோ
பழமை மறந்தாய் பண்பினைத் துறந்தாய்
என்முன் நில்லேல் இகழ்ந்துனை வெறுத்தேன்;
மண்ணில் முடிநீ மாய்ந்து மடிநீ
கண்முன் காணா தொழிகநீ கடிதே!

(தலையின் இழிந்த முடி பற்றிப் பாடியது)

23.09.75