22 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 1 |
ஒளிபட அவன்முகம் களியால் மலர்ந்த(து); அளிநிறை நெஞ்சை அவன்பால் வைத்துத் தளிரடி பெயர்த்துத் தையல் நடந்தனள்; பேதையின் பின்செல்லும் பேதுறும் மனத்தைத் தீதிலன் தடுத்துத் திருப்பினன் அவள்சிலை படைத்திட வேண்டும் பணியுள ததனால்; உடைத்தொரு கல்லில் உளியை நாட்டினன் தளிரடிச் சிலம்பொலி உளியடிக் கெழுமொலி குளிர்மலைச் சாரலில் குலவி எதிர்ந்தன சிலம்பொலி தாழ்ந்தது சிற்றுளி ஒலித்த (து) முடிந்தது படிமம் உண்ணான் உறங்கான் உடல்நலம் பேணான் கண்வழி புகுந்து கருத்திற் கலந்தவள் வண்ண உருவம் வடிப்பதே தொழிலாய் ஒவ்வோ ருறுப்பும் உன்னி நோக்கிச் செவ்வனே முடித்தனன் செப்பிய எழுநாள் முடிந்தது சிலையும் முடிந்தது நெஞ்சிற் படிந்த உருவின் படிமம் கண்டனன்; காதல் மடவார் கடைக்கண் பணித்தால் ஈதொரு பணியோ? ஏழ்சிலை முடிப்பர்! காதல் வேகம் கடிதே கடிதே! சிலையா அவளா? மன்னன் மகளாம் மயிலியும் வந்தனள் நன்னர்ச் சமைத்த நயத்தகு படிமம் கண்டனள் வியப்புக் கொண்டனள் மிகவே; `ஒண்டொடி என்போல் உளதோ இவ்வுரு? விண்டிடு மெய்’என வினவினள் தோழியை; மயிலியைச் சிலையின் மருங்கினில் நிறுத்திப் பயிலியற் சாயல் பார்த்தனள், விம்மி |