220 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 1 |
15. புகழ்ச்சியின் பயன் ஆர்வத் துடிப்பால் ஆசைப் பெருக்கால் பேர்பெற் றொளிரப் பெருகிய நினைப்பால் ஏதோ எழுதினன் என்பாற் கொணர்ந்தனன்; தீதோ நன்றோ திறந்துநான் படித்தேன்; செறிந்த கற்பனை சிற்சில அதனுட் சிறந்திடல் கண்டேன் சிந்தை மகிழ்ந்தேன் மகிழ்ந்துளம் நெகிழ்ந்திட வாழ்த்திப் புகழ்ந்தேன். புகழ்ந்துரை புகல்வது புரையன் றென்பதால்; பாவலன் நான்சொலும் பாராட் டுரையை ஆவலிற் பருகினன் அவனிரு செவியால்; நாவின் மழையில் நனைந்தனன் குளிர்ந்தனன் பாவின் திறமெலாம் பயின்றிடப் பலப்பல காவியம் படைத்தனன் கண்டுநான் வியந்தேன்; என்மொழி அவற்கோர் ஏணியாயது; நன்மொழி நலந்தரும் எனநான் உணர்ந்தேன்; மற்றொரு கவிஞன் வந்தனன் என்பால் பற்றுடன் அவன்தன் படைப்பினைத் தந்தனன்; புகழ்மொழி பொழிந்தேன் புதுப்புது நூல்பல புகலுவன் என்மனம் பூத்ததோர் நினைவால்; உருக்கிடும் புகழ்ச்சியை உளத்திடை நிறைத்தனன்; செருக்கினன்; மீசை முறுக்கினன், விரைத்தனன்; நிமிர்த்தினன் தலையை; நெருக்கினன் விழியை; உருத்து நோக்கினன் ஒப்பென என்முன் நிறுத்திட எவரே நிலத்தினில் உள்ளார்? யானே பெருங்கவி என்றவன் மனத்துள் |