பக்கம் எண் :

நெஞ்சிற் பூத்தவை221

தானே சொலில்சொலித் தருக்கித் திரிந்தனன்;
புதுவன படைக்கும் நினைவதை யிழந்தனன்;
மதுமயக் குற்றென மதிமயக் குற்றனன்;
‘இளங்கோ வள்ளுவர் எத்தனை யியற்றினர்?
உளங்கொளும் ஒவ்வொரு நூலால் உயர்ந்தனர்’
என்றவன் நினைந்தே இழிந்தனன் இழிந்தனன்;
நன்றுரை புகன்றேன் நாவாற் புகழ்ந்தேன்.
என்மொழி அவற்கோர் இடுதடை யாயது;
தவறுகள் உண்டாம் தகுவன ஆற்றினும்
அவரவர் பண்பறிந் தாற்றா விடத்தென
ஓதிய மொழிப்பொருள் உணர்ந்தேன் யானே.

23-12-1975