அவற்றை யெல்லாம் அவலம் என்மேல் திருப்பி விடுக்கும்! துரத்தி யடிக்கும்! அன்றுயர் வானில் அமைதியும் நீலமும் நின்றிடல் கண்டேன்; இன்றவை உளவோ? மண்ணில் வளர்ந்த மரங்களும் அவற்றில் வண்ணங் காட்டும் வளரிளந் தளிரும் கண்ணின் விருந்தாய்க் களிப்பினை நல்கும்; நினைப்பின் அவையெலாம் நிலைத்தவோ இன்று? மனத்தால் விழைந்தவை அனைத்தும் மாறின! அவையோ மாறின? அல்ல அல்ல; தவிரா மாறுதல் சார்ந்ததென் பாலே! இனியநல் லமைதி எய்துமோ இனிமேல் தனியல் லின்பந் தளிர்க்குமோ மனத்தே? (ஊட் (HOOT) என்பவர் இயற்றிய பாடலின் தழுவல்) |