224 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 1 |
17. புறமும் அகமும் நன்றென்றும் தீதென்றும் நன்கு பகுத்துணர ஒன்றுந் தெரியாமல், உள்ளத்தாற் சிந்திக்கும் ஆற்றல் இலனாக ஆதிநாள் வாழ்ந்தமகன் சாற்றும் மொழியொன்றும தானறியா அந்நாளில் கண்ணசைத்தும் கையசைத்தும் காட்டுகிற சைகையினால் எண்ணமதைச் சொல்லிவந்த எண்ணறியாக் காலத்தே காட்டகத்தே காடடர்ந்த கல்லின் குகையகத்தே கோட்டு விலங்கினமும் கூரெயிற்று மாவினமும் சூழ்ந்து திரிகின்ற சொல்லரிய சூழலில்தான் வாழ்ந்திருந்தான்; அந்த வரலாறு நாமறிவோம். கொல்லும் விலங்கின் குழுவிடையே வாழ்ந்ததனால் வெல்லும் வகையறிந்து வேட்டைத் தொழில்புரிந்து தற்காத்துக் கோடற்கும் தன்பசியைப் போக்கற்கும் கற்கருவி விற்கருவி கைக்கொண்டான் அம்மாந்தன்; அந்நாளில் வாழ்வின் அடித்தளமே வீரந்தான்; வீர விளையாட்டால் வெற்றிக் களியாட்டால் நேரங் கடந்துவர நீண்டநாள் தாண்டிவிடச் சிந்தனையில் ஓர்தெளிவு சேர்ந்து தளிர்விட்டு முந்திவரும் கூட்டுணர்வு மூண்டு வளர்ந்துவரக் கூடி மகிழ்ந்து குழுவாக வாழ்நெறியை நாடிக் குமுகாய நாட்டத்தைப் பெற்றிருந்தான்; ஒட்டி உறவாடி உள்ளங் களித்ததனால் கட்டுப் படுத்திக் கனிவுதரும் அன்புணர்வு விட்டுத் தளிர்த்து விளைந்து பெருகியது; மட்டுப் படுத்தும் வகையறியா அம்மாந்தன் |