அன்பின் வலிமைதனை அன்பு தருந்தொடர்பை நன்கு தெளிந்தான் நாள்கள் வளர்ந்துவரக் காதலெனும் பாலுணர்வைக் கண்டு மிகமகிழ்ந்தான் ஆதி மனிதனவன் அன்பின் பயன்கண்டான்; பேசும் மொழியறிவைப் பெற்று வளர்ந்ததற்பின் மாசிலா நூல்கள் வகுக்கும் வகையறிந்தான்; சாதல்தரும் வீரத்தை ஆதல்தரும் காதலினை ஓதும் புறமென்றும் உள்ளும் அகமென்றும் கண்டான் கனிதமிழில் விண்டான் உலகதனிற் கொண்டான் பிறரறிந்து கொள்ளாப் பெருமைஎலாம்; அவ்விரண்டு பண்பிற்கும ஆன இலக்கணமும் செவ்விதிற் செப்பினான் சேர்த்து. 5.12.1965 |