226 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 1 |
18. நகைதரு செயல் சிதறிய மையெலாம் திரையிற் படுங்கால் இதுதான் சித்திரம் எனிலது சரியோ? உளிபடு பொருளெலாம் உலகில் நிலைபெறும் ஒளிமிகு சிற்பமென் றோதுதல் முறையோ? மதிற்சுவர் மட்டும் மாந்தர் வதியும் புதுக்குடில் என்றால் பூவுல கேற்குமோ? களியா போலக் கழறும் மொழியெலாம் நளிசுவைக் கவியெனல் நகைதரு செயலே! |