230 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 1 |
வாழ்விலும் அலைகள் உண்டு; வருமிடர் பலவும் உண்டு; வீழ்வுறும் சரிவும் உண்டு; விழுங்கிடும் சுறவும் உண்டு; பாழ்படும் இவற்றைக் கண்டு பதறிடா தெதிர்த்து நின்று தாழ்வுறாத் துணிவை நம்பித் தலைப்படின் இன்பங் காண்பாய். தனதுளத் துணிவை நம்பித் தாழ்விலா முயற்சி கொண்டான் வினையிடை ஊழைக் கூட வென்றிட வல்லான் என்று மனவளப் புலவன் சொன்னான்; மற்றிதை மறுப்பா ரில்லை; உனையினி நம்பு; வாழ்வில் உயர்வது திண்ண மிங்கே! 30.01.1980 |