250 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 1 |
தேய்தலும் பின்வளர்ந்து தேறுதலும் விண்மதிக் கோய்தலிலாப் பண்பாகும்; வாழ்விலுமுண் டாதலினால் வாழ்வை வெறுக்காதீர் வாழும் வகைதெரிந்து தாழ்வைப் புறங்கண்டு தன்முயற்சி மேலோங்கிப் போராடி வெற்றிப் புகழ்மாலை கொண்டிடுவீர் நேரான வாழ்வில் நிலைத்து. (வம்புத்தேன் - புதியதேன்) (மாநிலத் தமிழாசிரியர் மாநாடு, சென்னை) 27.12.1968 |