பக்கம் எண் :

நெஞ்சிற் பூத்தவை253

இன்றே படங்காண ஏகுவோம் நீசென்று
நன்றே உடைமாற்றி வாவென்று நானுரைத்தேன்;
சொல்லி முடிக்குமுனம் துள்ளிக் குதித்தெழுந்த
தல்லிக் கொடிபோல் அசைந்தோடி உட்புகுந்து
செப்புச் சிலைபோல ஒப்பனைகள் செய்துவந்தாள்
அப்பப்பா என்னே அழகு!

திருப்புத்தூர் 08.06.1965