பக்கம் எண் :

254கவியரசர் முடியரசன் படைப்புகள் - 1

35. அவள்தான் பாடவைத்தாள்!

அவள்தான் என்னைப் பாட வைத்தாள்
அவனியிற் பெரும்புகழ் சூடவைத்தாள்

- அவள்தான்

பாலா கினும்சுவைத் தேனாகினும்
பாகா கினும்தரும் கேளாமலே
நாலா யிரங்கவி நூலாகவே
நான்பாடு வேன்அவை பாராமலே

- அவள்தான்

கொஞ்சம் வருவாய் எனநான் அழைப்பேன்
கொஞ்ச வருவாள் என்னுளம் அணைப்பாள்
வஞ்சி எனநான் வாய்விட் டழைத்தால்
வஞ்சியேன் வஞ்சியேன் என்றுளந் துடிப்பாள்

-அவள்தான்

கண்ணசை வாலொரு காப்பியம் படிப்பாள்
கையசை வாலெழில் ஓவியம் படைப்பாள்
பெண்ணியல் யாவையும் என்னிடங் கொடுப்பாள்
பெரும்பெருங் காப்பியம் தரும்படி உரைப்பாள்

- அவள்தான்