258 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 1 |
உலகியலின் பலகதைகள் பேசிப் பின்னர் உணவுண்ணச் சுவையமுது படைத்த ழைத்தாள்; சிலமொழிகள் உரையாடி உண்ணும் போது சிறுவிக்கல் ஒலிகேட்டு நீரைத் தந்தாள்; விலகியது வருவிக்கல், உண்ட பின்னர் வெளியிடத்தில் சாய்ந்திருந்தேன் அவளும் வந்தாள் சிலபொழுதில் பேரேப்பம் ஒன்று விட்டேன் ‘செரித்ததென அறிவிக்கும் அறிவிப்’பென்றாள். கனிமொழியாள் கொட்டாவி விடுதல் கண்டேன், கண்ணிமைகள் இணைவதற்கோ அறிவிப் பென்றேன்; இனியவளும் அயர்விழியால் ஆமாம் என்றே எழுவதன்முன் இருதும்மல் தும்மி விட்டேன்; ‘பனிபொழியும் நிலவொளியில் நீண்ட நேரம் படுத்திருந்தால் தும்மல்வரா தென்ன செய்யும்? இனியெழுக உள்வருக’ என்ற ழைத்தாள்; என்மனையாள் குறிப்பறிந்தேன் எழுந்து சென்றேன். |