40. காதலர் சொல்லாடல் தலைவன்: பஞ்சணையில் மலர்க்கணைகள் பார்வையிலே விழிக்கணைகள் மஞ்சமெனும் போர்க்களத்தில் மாதரசி வீழ்த்திவிட்டாய்! தலைவி: பாய்ந்தாலும் விழிக்கணைகள் பதியவில்லை நின்னுடலில் காய்ந்தாலும் மாறவில்லை காயங்கள் என்னுடலில்! தலைவன்: உள்ளமதிற் காயங்கள் உண்டாக்கி விட்டதம்மா கள்ளவிழிப் பார்வையினால் கலங்கிநிலை கெட்டதம்மா! தலைவி: தஞ்சமென எனையடைந்தாய் ததலைவாஎன் மனமகிழ்ந்தேன் தநெஞ்சமெனுஞ் சிறையிலிட்டு தநேயத்தாற் கட்டிவிட்டேன் தலைவன்: சிறைவைத்த பிறகெனக்குத் திரையென்னும் மறைவெதற்கு? தலைவி: குறைபட்டுப் போகாத தகூச்சமெனுஞ் குணமெனக்கு! தலைவன்: விண்ணுலகக் கனவிருக்க தமண்ணுலக நினைவெதற்கு? தலைவி: கண்ணெனவே தமிழ்மரபு தகாப்பதுதான் பெண்மரபு! |