262 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 1 |
41. பருவப் பேச்சு அவன்: அம்புலிப் பருவம் வந்ததும் வருவேன் அதுவரை காத்திரு என்றாளே தண்பனிப் பருவம் தணலாய்க் கொதித்தது தனிமையில் வாடிடச் செய்தாளே! அவள்: வருகையின் பருவம் தருவது புரிந்தேன் வாடிடும் அந்நிலை ஏன்இனியே? அரிவைஎன் னுள்ளம் நின்வயமாக அருகினில் இருப்பேன் நான்இனிமேல்! அவன்: ஊசலின் பருவம் ஆகிய தென்மனம் ஒருநிலை யின்றி அலைகிறதே ஆசையின் பெருக்கில் முத்திடும் பருவம் அளித்திட உன்னை அழைக்கிறது! அவள்: 1 காப்பின் பருவம் படிப்பதன் முன்னே கன்னியின் பருவம் நாடுகிறாய் 2யாப்பின் பருவம் கடப்பது முறையோ அதற்குள் ஏனோ வாடுகிறாய்? அவன்: பிள்ளைத் தமிழைப் பேசிடும் அமுதைப் பெற்று மகிழ்ந்திட நான்விழைந்தேன் அள்ளித் தந்திட நின்னை யழைத்தேன் ஆகும் பருவம் எத்தனையோ? அவள்: பத்துப் பருவமும் பாடிய பின்னே பாலப் பருவம் நான்தருவேன் பெற்றுக் கொண்டபின் தாலப் பருவம் பிள்ளை மகிழ்ந்திடப் பாடுகநீ! |