பக்கம் எண் :

நெஞ்சிற் பூத்தவை265

எழுத்துஞ் சொல்லும் பழமை
    எழுதும் பொருளோ புதுமை
பழத்தின் சுவைபோற் கவிதை
    படைத்தவன் முன்நான் பதுமை!

புணர்ச்சி விதிகள் எளிமை
    பொருளின் சுவையோ அருமை
உணர்ச்சி வடிப்பிற் புதுமை
    உவமை யறியாக் கவிதை

3.4.1982