தலைவி:
குழலோ முகிலோ என்று புனைந்தார்குயிலோ குரலோ என்று மொழிந்தார்அழகோ கலையோ என்ன நயந்தார்அறமோ முறையோ இன்று பிரிந்தார்!
தலைவன்:
உயிராய் உடலாய் ஒன்றி யிருந்தோம்உலகே அதுதான் என்று மகிழ்ந்தோம்மயிலோ அனமோ என்னும் நடையாள்மயலே துயரே தந்து நடந்தாள்!