47. சிரித்த முகம் சிரித்த முகம் வேணுமடி பெண்ணே - அதுதான் சேவை செய்யும் பெண்களுக்கு அழகு தரும் கண்ணே! (சிரித்த) வருத்தங்கள் வாழ்க்கையிலே வந்து வந்து போகும் - அது வந்து புகும் வாழ்விலேதான் இன்பம் வந்து சேரும்! (சிரித்த) கிள்ளக் கிள்ளத் தேயிலையும் தழையுது பாரு - கடமை செய்யச் செய்ய நன்மை வந்து விளையுது பாரு... மெள்ள மெள்ளத் துன்பம் வரும் இயற்கையின் கூறு - அதைத் தள்ளிவிட்டுக் கடமையிலே இதயத்தைச் சேரு... (சிரித்த) மேடு பள்ளம் தாண்டுவதால் சிதறிவிழும் அருவி - தரை மேல்விழுந்து ஒன்றுகூடி அமைதியுடன் மருவி நாடு நலம் செழிப்பதற்கு நாடி வருதல் போலே நம்மிதயம் பதறிடாமல் பணிபுரிவோம் அதாலே... (சிரித்த) (‘கண்ணாடி மாளிகை’ திரைப்படப் பாடல் -1) |