272 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 1 |
48. சீரழிந்து போகாதே புண்ணான என் வாழ்வில் பூத்திருக்கும் பொன் மலரே கண்ணே இம்மண்ணுலகம் காமுகரின் கோட்டமடி பாம்பு தேள் வாழ்வது போல் பாழுலகம் ஆனதடி தேம்புகிற என் வயிற்றில் தெள்ளமுதே ஏன் பிறந்தாய்? கல்லும் கசிந்துருகும் கண்டவர்கள் நெஞ்சுருகும் வல்லி நான் பட்டதெல்லாம் வாய் திறந்து சொன்னாலே. (புண்ணான) சோலை புகும் வண்டாகிச் சூழ்ந்து வரும் ஓர் பாவி ஆலை பிழி கரும்பாக ஆக்கி எனை ஓட்டிவிட்டான் பெற்றவரைப் போலிருந்து பேணி எனை வளர்த்த உத்தமனைக் கொன்று விட்டான் உருக்குலையச் செய்து விட்டான். என்ன துன்பம் வந்தாலும் ஏய்த்து வரும் ஆடவரைச் சின்னவளே நம்பாதே சீரழிந்து போகாதே! (புண்ணான) (‘கண்ணாடி மாளிகை’ திரைப்படப் பாடல் -2 ) |