பக்கம் எண் :

நெஞ்சிற் பூத்தவை273

49. பொய்மைகள் மாயும்

பாதை தெரியுது பார்
பண்பும் அறமும் அன்பும் மலர்ந்திடப்

(பாதை)

கோதையர் வாழ்வில் எத்தனை தொல்லை
கொடுமைகள் இழைப்போர் இனிமேல் இல்லை
பேதையராக வாழ்ந்தது போதும்
பெண்களின் துயரம் முடிந்தே தீரும்

(பாதை)

பேசும் மொழிகள் தேன் போலே இனிக்கும்
பெரியவர் போலே வேடம் இருக்கும்
பாசமெல்லாம் பிறர் பணத்தினில் இருக்கும்
பகட்டாய் நடிப்பவர் வேடத்தைக் கலைக்கும்

(பாதை)

எண்ணும் நினைப்பினில் எத்தனை வஞ்சம்
ஏனோ மனிதனுக்கு இதுபோல் நெஞ்சம்
மண்ணில் இனிமேல் பொய்மைகள் மாயும்
மாயங்கள் யாவும் வேருடன் சாயும்

(பாதை)

(‘கண்ணாடி மாளிகை’ திரைப்படப் பாடல் -3)